Hot Posts

6/recent/ticker-posts

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு செ.தாமோதரன் தலைமையில் அன்னதானம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிமின் ஆலோசனைப்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரபாளையம் ஊராட்சி  கிளை கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள்  அமைச்சருமான  செ. தாமோதரன்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம், முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, சீரபாளையம் கிளைச் செயலாளர்கள் சிவசாமி, லோகநாதன், பழனிச்சாமி, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.