நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் அவர்கள் வெற்றி பெற்றார்.
திமுக வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இதில் முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.
மேலும் ஆதி தமிழர் பேரவையின் சார்பில் பேரவை பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், கோவை மாநகர தலைவர் சத்தியன், தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணி, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.