அரிசி பாளையம் ஊராட்சித் தலைவர் கணேசன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி. இவர் ஊராட்சி தலைவராக பதவியேற்ற காலம் தொட்டு அரிசி பாளையம் ஊராட்சியை அடிப்படை வசதிகள் நிறைந்த ஊராட்சியாக மாற்றி உள்ளார்.
இவரது பொது வாழ்வு என்பது நீண்ட நெடியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெரிய பற்றாளர்.அந்த அடிப்படையில் கட்சியில் முனைப்புடன் சலிப்பற்று உழைத்து வருபவர். கட்சியை அரிசி பாளையம் ஊராட்சியில் வளர்த்தியதில் பெரும் பங்காற்றியவர்.
மேலும் இவரின் மக்கள் பணி போற்றலுக்கு உரியது. இதனை கருத்தில் கொண்டு உலக தமிழ் அமெரிக்க பல்கலைக் கழகம் இவரை பாராட்டி சிறந்த மக்கள் பணிக்கான முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
இது குறித்து அரிசி பாளையம் ஊராட்சிதலைவர் கணேசன் கூறுகையில், இது மகிழ்ச்சியான தருணம். என்னை கழகத்தில் வார்த்தெடுத்த கலைஞரை நினைவு கூறுகிறேன்.இந்த நேரத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கும், பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கும் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.