கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை ஒன்றியம் வெள்ளலூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அழகு நாச்சியம்மன் கோவில் வளாகத்தில் இறந்தவர்களுக்கான ஈமகிரிகை நடத்துவதற்கான காத்திருப்போர் கூடம் வேண்டும் என்பது. இதை சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரனிடம்
கோரிக்கையாக வைத்தனர். இதை உடனடியாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய். 31,00,000/- மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து இதற்காக பணிகளை முடிக்கப்பட்டது. இன்று காத்திருப்போர் கூடம் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு வரும் விதமாக
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வெள்ளலூர் பேரூராட்சி தலைவரும் பேரூராட்சி கழக செயலாளருமான மருதசாலம், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கணேசன், கண்ணையன், அக்ரி கோபால், வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.